மக்களிடம் சேவைகள் சென்றடையாவிட்டால் எத்தனை வங்கிகள் திறந்தாலும் பயனில்லை : எம்.ரமேஸ்வரன்
எத்தனை வங்கிகள் திறந்து வைத்தாலும் பயனில்லை மக்களிடம் சேவைகள் சென்றடையாவிட்டால் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் (M. Rameswaran) தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பகுதியில் சமூர்த்தி வங்கி திறக்கும் நிகழ்வு இன்று (04) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமயில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இங்கு உரையாற்றிய பணிப்பாளர் தெரிவத்தார் “சமூர்த்தி வங்கியில் நிறைய காசு இருக்கின்றது. அந்த காசு மக்களை சென்றடைய வேண்டும்” என்று அந்த நோக்கம் தான் எமது நோக்கம்.
வங்கி திறப்பது மக்களுக்கு சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான்.
உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் சமூர்த்தி அரசியல் கட்சி பார்த்து தான் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால் கிடைக்க வேண்டிய எத்தனையோ பேருக்கு சமூர்த்தி கிடைக்க வில்லை.
நாங்கள் சமூர்த்தி பெற வேண்டியவர்களின் பட்டியலை தயாரிக்கும் போது 23,000 பேருக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்பதனை கோவிட் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க பட்டியல் தயாரிக்கும் போது தெரிந்துக்கொண்டோம்.
அதன் அடிப்படையில் தான் 5000 பெற்றுக்கொடுத்தோம். நாங்கள் எழை மக்களுக்கு உதவிகள் செய்யும் போது கட்சி பார்ப்பதில்லை. அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்களுக்கு இந்த நிதி உதவி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தான் எதிர்ப்பார்கின்றார்.
ஆகவே எந்நாளும் சமூர்த்தி உதவி பெறும் மக்களாக இருக்கக்கூடாது. இந்த நிதியினை கொண்டு இவர்கள் வாழ்க்கையில் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று எதிர்பார்த்து தான் கடந்த வருடமும் இந்த வருடமும் பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான நிதியினை சமூரத்திக்காக ஒதுக்கப்படுகின்றது. இது ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அந்த நிதியின் மூலம் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும்.
ஆகவே இந்த நோக்கம் நிறைவேற வேண்டும். மக்களுக்கு சேவையாற்றும் போது மக்கள் குறை கூறுவார்கள். அதனை பொருட்படுத்தாது சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவையாற்ற வேண்டும்.
இந்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரம் சேவையாற்றாது பக்கத்தில் உள்ளவர்களையும், இணைத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் வீடு வீடாக சென்று சேவையினை முன்னெடுத்தார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தலைவி செம்பகவள்ளி, மாவட்டச் செயலாளர், சமூர்த்தி உத்தியோகஸத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
