குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றன.
அந்தச் சேவைகளுக்காக முன்கூட்டிய திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக் கொண்டு சந்திப்பை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக WWW.immigration.gov.lk என்ற இணையத்தளம் அல்லது 0707 101 060 என்ற தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த முடியும்.
தொலைபேசி எண்களை பயன்படுத்தினால், அரசு வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை வசதிகள் செய்து தரப்படும்.
மேலும், கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் அல்லது கடவுச்சீட்டுகளின் இருப்பு காலாவதியாகிவிடும் என்ற பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.







புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
