சீன கப்பல் தொடர்பில் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
சீனாவின் இராணுவ கப்பல்களை ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை, இராணுவம், முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கடற்படை கப்பல் ஆயுதமற்ற நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பயணப் பாதை தெரியவில்லை.
எனினும் தற்போது கப்பலை எப்போது நிறுத்துவது என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, 730 அடி நீளமுள்ள இந்த சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல், காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,