தேர்தல் விஞ்ஞாபனத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு முக்கிய இடம் : சுரேந்திரன் தெரிவிப்பு!
வடக்கில் உள்ள ஒன்றரை இலட்சம் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (10) அராலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசத்தின் திரட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியத்திலே தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற தவறான கருத்தை கடந்த மாதம் தமிழ் மக்களிடையே பரப்பி திரிந்தவர்களை மக்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில், சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசத்தின் திரட்சியையும், இன விடுதலை வேட்கையையும், சமாந்தரமாக எங்களது அபிவிருத்தியையும் உறுதி செய்ய முடியும் என நாங்கள் இங்கே உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அரசாங்கத்திற்கு அழுத்தம்
அதுபோல வடக்கு மாகாணத்தில் பிரதான தொழிலாக கருதப்படுகின்ற, ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட கடல் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற பாரிய பிரச்சினைகளை நாங்கள் நிச்சயமாக தீர்த்து வைப்போம்.

2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்ற இழுவைமடி படகுகளை தடை செய்கின்ற சட்டத்தையும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைப்படுத்த நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.
இது நமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான ஒரு விடயமாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம்” எனவும் குருசாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam