சர்வகட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கான பிரகடனம் வெளியீடு
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் இன்று(08) மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இந்த பிரகடனம் சர்வகட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனையே வலியுறுத்துகிறது.
மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் குறித்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.
செங்கடகல பிரகடனம்

இப்பிரகடனம் ஊடாக சர்வகட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
போராட்டம்

இதேவேளை, நாளை ஜனாதிபதிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளதுடன், கொழும்பின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri