இந்தியாவின் அடுத்த திட்டம்: சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா-எல் 1
புதிய இணைப்பு
சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறங்கும் வரலாற்று சாதனையை இந்தியா அடைந்த பிறகு, சூரியனை நோக்கிய முதல் பயணத்திற்கு இந்தியா தற்போது தயாராகியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3, நிலவின் தெற்குப் பகுதியில் அசாதாரண வெப்பத்தை பதிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்தியா தனது கண்களை சூரியனை நோக்கி வைத்துள்ளது.
ஆதித்யா-எல் 1
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறது.
சந்திரனின் தென் துருவத்தினை அடைந்த முதல் விண்வெளி நிறுவனம் என்ற வரலாற்றைப் படைத்த 10 நாட்களுக்குள், இஸ்ரோ ஆதித்யா-எல் 1 சோலார் ஆய்வை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.
#WATCH | Preparations underway at Sriharikota for Aditya-L1 Mission launch by Indian Space Research Organisation (ISRO)
— ANI (@ANI) September 1, 2023
Aditya-L1 launch is scheduled for tomorrow, 2nd September. pic.twitter.com/Q1voY7DUk4
இந்த ஏவுதல் இன்று (02.09.2023), சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 ஆனது போலார் விண்வெளி லாஞ்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி) மீது ஏவுவதற்கு முதன்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது சந்திரயான்-3 போன்ற ஒரு பாதையைப் பின்பற்றும் எனவும் ஆரம்பத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் வேகத்தை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் பாதையை மாற்றி சூரியனை நோக்கிய பாதையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா-எல்1 திட்டமானது சூரிய ஆராய்ச்சிக்கான இந்தியாவின் முன்னோடி விண்வெளி பயணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரியன் - பூமிக்கு இடையிலான முதல் லாக்ரேஞ்ச் புள்ளியைச் சுற்றி ஒரு நிலையான சுற்றுப்பாதையை அமைப்பதே இதன் நோக்கமாகும் என இஸ்ரோ கூறியுள்ளது.
முதல் இணைப்பு
விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான நேரம்(கவுன்ட்டவுன்)நேற்று (01.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (02.09.2023) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, இன்று (02.09.2023) 11:50 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ விண்கலம்
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் இந்தியா உற்பட உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள 'லக்ராஞ்சியன் புள்ளி எல்-1' என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில்,
PSLV-C57/Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 1, 2023
The 23-hour 40-minute countdown leading to the launch at 11:50 Hrs. IST on September 2, 2023, has commended today at 12:10 Hrs.
The launch can be watched LIVE
on ISRO Website https://t.co/osrHMk7MZL
Facebook https://t.co/zugXQAYy1y
YouTube…
'சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லொக் ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.