சந்திரயான்-3க்கு பிறகு இஸ்ரோவின் புதிய திட்டம்
சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 (Aditya-L1) விண்கலத்தை செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த இஸ்ரோ நிறுவனத்தின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை ஆரம்பித்துள்ளது.
இதையடுத்துயடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டெம்பர் 2ஆம் திகதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
தகவல்களைப் பெற முடியும்
இதுதொடர்பாக இந்திய அகமதாபாத் மாநிலத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குநர் நிலேஷ் எம்.தேசாய் கூறுகையில், ஆதித்யா-எல்1 தயார் நிலையில் உள்ளதுடன், செப்டெம்பர் 2ஆம் திகதி விண்ணில் ஏவ வாய்ப்புள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020ஆம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ரொக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது.
பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1இல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
