நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள்
நிலவின் துருவப்பகுதிகளில் நீர் இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய (India) விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிலவின் தென் துருவப் பகுதிக்கு சந்திரயான் (Chandrayaan) விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அங்கு விக்ரம் லேண்டர் (Vikram lander) மற்றும் பிரக்யான் ரோவர் (Pragyan rover) ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.
நிலத்தடி பனியின் அளவு
குறித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இஸ்ரோ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நிலவின் மேற்பரப்பில் முதல் இரண்டு மீட்டர்களில் நிலத்தடி பனியின் அளவு சுமார் 5 முதல் 8 மடங்கு அதிகமாக இருப்பதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
நிலவின் தென் துருவத்தில் பனி கட்டிகள் இருப்பதை விட வட துருவத்தில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றத்தினால் நிலவின் மேற்பரப்பில் நீர் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த மேலதிக தகவல்களை சந்திரயான் - 4 திட்டத்தில் மூலம் இஸ்ரோ வெளியிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |