கறுப்பு செப்டெம்பர் - இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று சம்பவம் (Video)
அரபு நாடுகளின் உதவிகளுடன் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்ட பாலஸ்தீன விடுதலை அமைப்புகளை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றும் சம்பவத்தை 1968 இல் உலகம் கண்டிருந்தது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரைகளை அந்த காலகட்டத்தில் தன்வசப்படுத்தியிருந்த ஜோர்தான், அந்நாட்டுக்குள் பெரும் இராணுவத் தளங்களை உருவாக்கி பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.
1968 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேருந்து மீது பாலஸ்தீன அமைப்பு மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலுக்கு எதிராக, ஜோர்தனுக்குள் அதிரடியான படை நகர்வை மேற்கொண்டது இஸ்ரேலிய இராணுவம்.
இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தொடர்ந்தும் இஸ்ரேலிய இராணுவத்திடம் தோல்விகளை சந்தித்து வந்த அரபு நாடுகளுக்கு belts of karama தாக்குதல் வெற்றியானது புதிய உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது.
இவ்வாறு அரபுநாடுகளின் கூட்டால் இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும், அரபு வரலாற்றில் மறக்கமுடியாத பிளக் செப்டெம்பர் பற்றியும் முழுமையாக ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...