ரஃபாவின் பாதுகாப்பு வலயத்துக்குள் தீவிர தாக்குதலை தொடர்ந்துள்ள இஸ்ரேல்
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் பாதுகாப்பான வலயமாக நியமிக்கப்பட்டுள்ள காசாவின் முக்கிய பகுதிக்குள் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள மிகச்சிறிய நிலப்பகுதியான அல்-மவாசியில் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் அல்-மவாசியில் திடீர் மற்றும் எதிர்பாராத ஊடுருவலை மேற்கொண்டதாகவும், வெளியேற்றும் மையங்கள் மற்றும் தற்காலிக கூடாரங்களை நோக்கி ஏராளமான பீரங்கி குண்டுகளை வீசியதாகவும் காசாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஜய்யின் காலில் யாரும் விழச்சொல்லவில்லை : பாதிக்கப்பட்ட பெண் விளக்கம்
கள மருத்துவமனைகள்
இது கள மருத்துவமனைகள் நிறுவப்பட்ட இடம் என்றும் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுக்கான மையம் எனவும் கூறப்படுகிறது.
ரஃபாவில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது குறித்த அமெரிக்காவின் அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி, இஸ்ரேலிய துருப்புக்கள் ரஃபா மேற்குப் பகுதிக்கு ஒரு பகுதியில் தாக்குதல்களை தற்போது தொடர்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |