இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
இஸ்ரேலிய(Israel) தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
நுசைராத், ஜவைதா, மகாசி மற்றும் டெய்ர் அல்-பலாஹ் உள்ளிட்ட மத்திய காசாவின் சில இடங்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.இரண்டு நாட்களுக்கு முன்னரும் குறித்த பிரதேசத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
வான்வழி கண்காணிப்பு
எனினும் ஹமாஸ் கூடும் இடங்கள் மற்றும் கட்டளை மையங்களையே தாம் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வான்வழி கண்காணிப்பு போன்ற பொதுமக்கள் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய காசாவின் ஒரு பகுதியை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அங்கிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் யேமனில் இருந்தும் தமது நாட்டிற்குள் ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும், எனினும் அந்த ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள்
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களே இந்த ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2023 ஒக்டோபர் 7ஆம் திகதியன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.
அவர்கள் சுமார் 1,200 பேரைக் கொன்றனர், பெரும்பாலும் பொதுமக்கள், மற்றும் சுமார் 250 பேரைக் கடத்தினர்.
சுமார் 100 பணயக்கைதிகள் இன்னும் காசாவிற்குள் உள்ளனர், அதில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து, பதிலடி கொடுக்கும் விதமாக இதுவரை நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 45,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் காரணமாக, காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 90 வீதமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |