வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்!
வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
வனப்பகுதியில் சிலர் விடுமுறைக்குச் சென்றிருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த பகுதியில் இருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து இவர்கள் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.