ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், காசாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்துக்கு சொந்தமான பீரங்கிகளை குறி வைத்து லெபனான் நாட்டிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
