காசா போர் முனையில் பலியான இஸ்ரேல் அமைச்சரின் மகன்
இஸ்ரேல் போர் சபையின் அமைச்சரும் முன்னாள் இராணுவ தலைமைத் தளபதியுமான காடி ஐசன்கோட்டின் மகன் காசா போர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
ஐசன்கோட் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவரும் அக்டோபர் 7 தாக்குதல் பிறகு பிரதமர் நெதன்யாகு அமைத்த போர் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினர்.
தொடர் போராட்ம்
இந்நிலையிலே இவரது மகன் கல் மெயிர் ஐசன்கோட் (25) காசா போர் முனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் பற்றி பென்னி காண்ட்ஸ் தெரிவிக்கையில், “காடி மற்றும் அவரது குடும்பத்துக்கு இஸ்ரேல் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். கல் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்” என கூறியுள்ளார்.
மேலும், கல் மெயிருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஹெர்ஸ்லியாவில் இன்று (08 .12.2023) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நெதன்யாகு முன்னதாக இந்த இழப்பு தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ மரியாதையோடு கொண்டு செல்லப்பட்ட வீரரின் உடலுக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
