உடனடியாக சரணடையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் அழைப்பு
காச முனைகளில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையானது இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்புக்களிலும் இருந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை உடனடியாக சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)
ஹமாஸ் அமைப்பின் அழிவு
போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு ஆரம்பித்துவிட்டது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ''இது பாலஸ்தீன அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவர் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரண்டைந்துவிடுங்கள்'' என கூறியுள்ளார்.
சில ஹமாஸ் அமைப்பினர் சரணடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய ஹமாஸ் அமைப்பு யாரும் சரண்டையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதுவரை 17,700 இற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும் 100 இற்கும் மேற்பட்ட கோயில்களை தரைமட்டமாக்கியுள்ளது என்றும் பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில் ஐநாவின் போர் நிறுத்தத்திற்கான எந்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |