வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்
போலந்தில்(Poland) இருந்து இஸ்ரேல் (Israel) நோக்கி பயணமான El Al என்ற பயணிகள் விமானமானது மருத்துவ அவசரம் கருதி துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் துருக்கியின் Antalya விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி கிரேக்கத்திற்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனிதாபிமான அடிப்படை
மருத்துவ அவசரம் இருந்தும் Antalya விமான நிலைய ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து கிரேக்கத்தின் ரோத்ஸ் தீவுக்கு விமானம் புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து எரிபொருள் நிரப்பியதை அடுத்து அந்த விமானம் இஸ்ரேல் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இரு நாடுகளுக்குமான நேரடி விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மருத்துவ அவசரம் காரணமாக இஸ்ரேலிய விமனாம் தரையிறக்க அனுமதிக்கப்பட்டதையும், நோயாளியை சிகிச்சைக்கு அனுப்பியதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது என்றும், ஆனால் அதற்கான நடைமுறைகள் முடிவடையவிருந்த நிலையில், விமானி தனது சொந்த விருப்பப்படி வெளியேற முடிவு செய்தார் என்றும் துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டு பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், அந்த விமானம் பல மணி நேரம் எரிபொருள் நிரப்பும் பொருட்டு காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்... சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள்](https://cdn.ibcstack.com/article/539e1449-a44c-4900-b5f9-64ae9d5b02bb/24-668240e627c0f-sm.webp)
வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்... சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள் News Lankasri
![ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி](https://cdn.ibcstack.com/article/f87bfd70-c1d2-4e60-902d-bed78ec32605/24-66827bd0cbf22-sm.webp)
ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி News Lankasri
![இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க](https://cdn.ibcstack.com/article/aff970d0-83bb-4fb8-9259-89e1d6e95038/24-6682a1a7bb4dc-sm.webp)
இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
![கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/6e35dfda-e2cc-4ce3-bf26-3e4038db7f05/24-66825e485336d-sm.webp)
கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா? News Lankasri
![497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி](https://cdn.ibcstack.com/article/07f2a27a-88ef-478a-b4d3-fa624e040e3c/24-6682a596d2853-sm.webp)