எதிர்பாராத தாக்குதல்! 400க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த இஸ்ரேலிய ஏவுகணைகள்
காசாவை இலக்குவைத்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தழ வெளியிட்டுள்ளன.
ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அதிக பலத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் பிடிபட்ட 250 பணயக்கைதிகளில் 59 பேரை இன்னும் வைத்திருக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழு, இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறியதாகவும், நிரந்தர போர்நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான மத்தியஸ்தர்களின் முயற்சிகளை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் குற்றம் சுமத்தியிருந்தது.
மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததற்கும், போர்நிறுத்த திட்டங்களை அவர்கள் நிராகரித்ததற்கும் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவத்திற்கு எதிராக "வலுவான நடவடிக்கை" எடுக்குமாறு கூறிய நிலையிலேயே இஸ்ரேலிய ஏவுகணைகள் காசாவை தாக்கியுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம்
இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிவித்திருந்தது.
குறித்த தாக்குதலானது ஹமாஸுக்குச் சொந்தமான நடுத்தர இராணுவத் தளபதிகள், தலைமை அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசா பகுதியின் வடக்கிலிருந்து தெற்கு வரை பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கூடார முகாம்களையும் இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
மேலும் இஸ்ரேலிய ஏவுகணைகள் எல்லைக் கோட்டைத் தாண்டி அந்த பகுதிக்குள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனிய அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஹமாஸ் தகவல்
அது ஒரு நரக இரவு என்றும், போரின் முதல் நாட்கள் போல் காணப்பட்டதாகவும் குறித்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
தனது பழைய எதிரியான ஹமாஸை ஒழிப்பதாக நெதன்யாகு சபதம் செய்துள்ள நிலையில், இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் தரைவழி தாக்குதல்களால் ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவரான எஸ்ஸாம் அட்டாலீஸ், துணை நீதி அமைச்சர் அகமது அல்-ஹெட்டா மற்றும் உள்துறை துணை அமைச்சரும் ஹமாஸ் பாதுகாப்பு சேவைகளின் தலைவருமான மஹ்மூத் அபு வத்ஃபா ஆகியோர் வீடுகள் மீதான வான்வழித் தாக்குதல்களில் அவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |