பாலஸ்தீன கைதிகளிடம் அத்துமீறிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்: சர்வதேச அளவில் கண்டனம்
இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கேலி செய்து காணொலி எடுப்பதை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில், அவர் கெமரா குழுவினருடன் இஸ்ரேலிய சிறைகளுக்குச் சென்று பாலஸ்தீன கைதிகளை அவமதித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஏளனம் செய்யும் காணொலி காட்சிகள்
இந்த நிலையில், சர்வதேச கடல் பகுதியில் வைத்து இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உதவிக்கப்பலில் இருந்த வெளிநாட்டு ஆர்வலர்கள் குழுவொன்றை, கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் மண்டியிடச் செய்து, பென்-க்வீரினைப் பார்த்து ஏளனம் செய்யும் காணொலி காட்சிகள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.

இந்த அதிர்ச்சியூட்டும் காணொலி காட்சிகளுடன், சிறைபிடிக்கப்பட்ட ஆர்வலர்களில் குறைந்தது 15 பேராவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்களும் சேர்ந்து வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவில் மிகப்பெரிய தூதரக ரீதியிலான எதிர்ப்பையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 13 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam