காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
காசாவின் (Gaza) தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆறு பெண்களும், ஐந்து குழந்தைகள் அடங்குவதாக கூறப்படுகிறது.
எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா நகர் ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
தரைவழி தாக்குதல்
இந்நிலையில் காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) சவுதி அரேபியா சென்றுள்ள நிலையில் இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
