லெபனானில் தொடரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
மத்திய கிழக்கில் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் நிலவி வந்தாலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதல்கள் அங்குள்ள சிறுவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம்(09) நடைபெற்ற தாக்குதல்களில் மட்டும் 33 சிறுவர்கள் கொல்லப்பட்டதாகவும், 153 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்
கடந்த மார்ச் 2ஆம் திகதி முதல் இதுவரை லெபனானில் சுமார் 600 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது படுகாயமடைந்துள்ளனர் என்று யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தைகள் மீட்கப்படுவதாகவும், பலர் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
லெபனான் முழுவதும் நிலவும் இந்த அசாதாரண சூழலால் இதுவரை 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் சுமார் 3,90,000 சிறுவர்கள் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு தேடி இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில்
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் எந்தச் சூழலிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பெய்ரூட் நகரில் காயமடைந்த சிறுவர்களுக்கு யுனிசெஃப் தனது சிறப்புத் திட்டங்கள் மூலம் அவசரச் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பராமரிப்புப் பணிகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் போர்நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில், லெபனானில் தொடரும் இந்த இராணுவ நடவடிக்கைகள் ஒட்டுமொத்த அமைதிக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்தப் போரின் கோரப்பிடியில் லெபனான் சிறுவர்கள் கைவிடப்படக்கூடாது என்று ஐ.நா பொதுச்செயலாளர் உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam