இலங்கையில் உள்ள தமது நாட்டவர்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை
பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால், இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பே பிரதேசம் மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலுக்கான காரணம்
இந்தநிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு சபை, குறித்த அச்சுறுத்தலின் சரியான தன்மையை குறிப்பிடவில்லை.
எனினும், இலங்கையின் மற்ற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும், பொது இடங்களில் பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், இலங்கையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன், தமது அதிகாரிகள், நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
