இரண்டு துண்டு ரொட்டியுடன் வீதியில் கதறும் காசா மக்கள் : இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாடு
சேமித்து வைக்கப்பட்டிருந்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு துண்டு அரபிக் ரொட்டியுடன் காசா மக்கள் வசித்து வருவதாகவும், தெருக்களில் தண்ணீர், தண்ணீர் என்ற சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருப்போம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நீடித்து வருகின்றது.
அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
இந்தநிலையில், காசா பகுதியில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ தேவைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யுத்தத்தில் பாலஸ்தீன தரப்பில் இருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துச் செல்கின்ற நிலையில் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
அதேசமயம், இஸ்ரேல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களை திருப்பி அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், போர் இடைநிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்ன் இஸ்ரேல் சென்றுள்ளார்.
அவரிடம், போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை முன்னோக்கி சென்று கொண்டிருப்போம் எனவும் நெத்தன்யாகு குறிப்பிட்டுள்ளார்.