அடுத்தக்கட்ட நகர்வு! அமெரிக்காவுடன் முக்கிய திட்டங்களை வகுக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை தொலைபேசியில் இடம்பெற்றதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் சண்டையை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பு விவாதம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ நடவடிக்கை
இந்நிலையில் காசாவில் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க 36ஆவது இராணுவ பிரிவு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சூழ்நிலை மதிப்பீட்டைத் தொடர்ந்து, 36ஆவது பிரிவு தெற்கு கட்டளையில் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.
36ஆவது பிரிவு யுத்த களத்தில் டாங்கிகளை பயன்னடுத்தி தாக்குதலை முன்னெடுக்கம் இஸ்ரேலின் முக்கிய அமைப்பாக கருதப்படுகிறது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri