இஸ்ரேலிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை
காசா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இது வன்முறையை மேலும் அதிகரிக்கும் என்றும், அதன் மக்களின் துன்பத்தை மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
காசா நகர்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற காசா நகரைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உடனடி போர்நிறுத்தத்திற்கு அமைச்சகம் அழைப்பு விடுத்ததுடன், நிலையான அமைதியை அடைய அனைத்து தரப்பினரும் இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



