தொடரும் காசா போர் : சர்வதேச ஊடகத்துக்கு தடை விதித்த இஸ்ரேல்
காசாவில் போர் தொடரும் வரை இஸ்ரேலில், சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின்(Al Jazeera) செயல்பாடுகளை முடக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) அமைச்சரவை இன்று(05.05.2024) முடிவு செய்துள்ளது.
எனினும் கத்தார் தொலைக்காட்சி வலையமைப்பின் அல்ஜசீரா சேவை, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்த குற்றச்சாட்டை,ஆபத்தான மற்றும் அபத்தமான பொய்" என்று நிராகரித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள்
இது அதன் செய்தியாளர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று குறிப்பிடுள்ள அல் ஜசீரா, சட்ட நடவடிக்கையை தொடர உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும், கத்தார் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் அல் ஜசீரா காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில் அல் ஜசீராவின் முடக்கலை ஆதரித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அல் ஜசீரா இன்னும் நீதிமன்றத்தில் அதைத் தடுக்க முயற்சி செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த அறிவிப்பின்படி, நாட்டில் அல் ஜசீராவின் அலுவலகங்களை மூடுவது, ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்வது, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களில் இருந்து சேவையை துண்டிப்பது மற்றும் அதன் இணையதளங்களை முடக்குவது ஆகியவை அடங்குமென தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா Manithan