இஸ்ரேலில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள்! (Video)
உக்ரைன் களமுனைகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஏவுகணையான அயன்டோம் ஏவுகணை முக்கியமான வகிபாவத்தை கொண்டிருக்கும் என்று உக்ரைன் உறுதியாக நம்புகின்றது.
உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆரம்பித்ததை தொடர்ந்து இஸ்ரேலின் அயன்டோம் ஏவுகணை பொறிமுறையை தந்து உதவுமாறு இஸ்ரேலிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகளை ரஸ்யா பாவிப்பதை தொடர்ந்து இஸ்ரேலின் அயன்டோம் ஏவுகணைக்கான கோரிக்கையை உக்ரைன் சற்று உரக்க பேச ஆரம்பித்துள்ளது.
80 முதல் 97 வீதம் துல்லியமாக தாக்கும் இஸ்ரேலின் அயண்டோம் ஏவுகணை தான் உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை என்று கூறப்படுகிறது.
அதனால் தான் அயண்டோம் ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறையை தமக்கு தந்துதவுமாறு இஸ்ரேலிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலிடம் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் பற்றியும் உக்ரைனின் தற்போதைய களமுனை தொடர்பில் ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri