உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்ய சிறுமி வரைந்த ஓவியம்! தந்தைக்கு நேர்ந்த கதி
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பள்ளியில் ஒரு ஓவியத்தை வரைந்தாள்.
அதில் உக்ரைனிய கொடியுடன் நிற்கும் ஒரு பெண்ணையும், குழந்தையையும் நோக்கி ரஷ்ய கொடி அருகே ஏவுகணைகள் செல்லும் ஓவியத்தை வரைந்தாள்.
சிறுமி வரைந்த ஓவியம்

இது தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தை ரஷ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.
மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஷ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்த தந்தை
அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த குற்றச்சாட்டின் கீழ் 13 வயது மாசா இரண்டு மாதங்களிற்கு முன்னர் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்த தந்தை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல் நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
ரஷ்ய இராணுவத்தை அவமதித்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டுள்ள பலரில் இவரும் ஒருவர். எனினும் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தமைக்காக மகளை வீட்டிலிருந்து ரஷ்ய அதிகாரிகள் அகற்றி சிறுவர் இல்லத்தில் சேர்த்தமை உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri