ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் நகரங்கள் மீது இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது.
ஈரான் ஜனாதிபதி அலுவலகம்,புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது. ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம்.

ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.
President Donald J. Trump on the United States military combat operations in Iran: pic.twitter.com/LimJmpLkgZ
— The White House (@WhiteHouse) February 28, 2026
இரண்டாம் இணைப்பு
ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது தாக்குதல்களை அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த தாக்குதல்களின் நோக்கம் எதிர்காலத்தில் உடனடி அச்சுறுத்தல்களை முற்றிலும் ஒழிப்பதுதான் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானில் "பெரிய போர் நடவடிக்கைகளை" தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியலில் 8 நிமிட காணொளியை வெளியிட்டு ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலுக்குள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
முன்னெச்சரிக்கை தாக்குதல்

ஈரானுக்கு எதிராக தாங்கள் ஒரு 'முன்னெச்சரிக்கை தாக்குதலை' நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க அதிகாரி ஒருவர், அமெரிக்காவும் இந்தத் தாக்குதல்களில் பங்கேற்றதாகக் கூறியுள்ளார்.
தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக தெரு மற்றும் ஜோம்ஹோரி பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri