பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறை: ஐ.நா அதிகாரி கடும் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பாலஸ்தீனப் பகுதி்க்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடிமக்களும் இராணுவமும் ஒன்றிணைந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வர்த்தக உறவு
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அல்பானீஸ், காசா தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சூழலில், மேற்குக் கரையில் பாதுகாப்பற்ற அப்பாவி மக்களுக்கு எதிராகப் படுகொலைகளும் கொடூர வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேசச் சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு, இஸ்ரேல் மீது உடனடியாக ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், அந்நாடனுடனான வர்த்தக உறவுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri