இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை: ஈரான் அரசு அதிரடி
இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் தென்கிழக்கு, சிஸ்தான் - பாலுசெஸ்தான் மாகாணத்திலுள்ள சாஹேதான் சிறையில் நேற்று(16) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கிய ஆதாரங்களுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வெளியிடும் தகவல்கள் (Video)
மொசாத் உளவுத்துறையுடன் தொடர்பு
குறித்த நபர் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும், குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் அவருக்கு தொடர்புள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக முக்கியமான தரவுகளை திரட்டி மொசாத் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அவர் கைமாற்றியுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஈரானுக்கு எதிரான குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஒரு மொசாத் அதிகாரியிடம் இரகசிய தகவல்களை கையளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அந்த நபர் எப்போது கைதானார் அல்லது அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் ஈரான் அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

முக்கிய ஆதாரங்களுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் வெளியிடும் தகவல்கள் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
