இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்
இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த செய்தி உண்மையானதென உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் கட்டண ரசீது தேசிய நுகர்வோர் முன்னணியிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுடுநீருக்கு கட்டணம்
“இது ஒன்று தான் தெரிந்த விடயமாக பேசப்படுகின்றது. மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள். இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.
இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளோம்.
நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.
மின் கட்டணம்
நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.
எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும்.
சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |