இஸ்லாமிய பண்டிகை நாளான நேற்றும் காசாவில் 56 பேரை பலியாக்கிய இஸ்ரேலின் தாக்குதல்!
காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் , காசா பகுதியில் தொடர்ந்தும், பதற்றமான சூழல் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பண்டிகை நாளான நேற்றும் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்லாமிய பண்டிகை
இதன்படி, நேற்று காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா என்பவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்து உள்ளது.
இந்த தகவலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri