காசாவில் ஒரு கிலோ சீனி 17,000 ரூபா..! தொடரும் அவலநிலை
காசாவிற்கு அனுப்பப்படும் நிவாரண உதவிகளை சிலர் அபகரித்து வருவதால் அங்கு விற்கப்படும் பொருட்கள் 500 மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக காசாவில் ஒரு கிலோ சீனி இலங்கை மதிப்பில் 17,000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
காசாவிற்கு அனுப்பப்படும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்த இஸ்ரேல், உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து, மார்ச் மாதம் முதல் மிகவும் சிறிய அளவிலான பொருட்களை உள்ளே அனுப்ப தொடங்கியிருந்தது.
வணிக மாஃபியாக்கள்
இவ்வாறு சொற்ப அளவில் அனுப்பப்படும் பொருட்களை சிலர் அபகரித்து அதனை அதிக விலைக்கு காசாவில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் படி, காசாவில் ஒரு லீற்றர் சமையல் எண்ணெய் 15,000 ரூபாய்க்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 7,000 ரூபாய்க்கும் ஒரு கோபி(Coffee) 6,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தாக்குதலினால் இவ்வாறான வணிக மாஃபியாக்களினாலும் காசாவில் அவல நிலை தொடர்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
