இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழப்பு
காசாவின் தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடம் ஒன்றின் மீது, இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கியுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான வகையில் பாலஸ்தீனியர்கள் நடந்து கொண்டதாகவும், தங்கள் படைகளின் எச்சரிக்கையை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் இஸ்ரேல் விமானப்படை விளக்கமளித்துள்ளது.
தாக்குதல்
ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




