பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதல் - ஈரான் இராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும் என ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட தளபதி சர்தார் அசாதி எச்சரித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் வழக்கமான இராணுவம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆயுதப் படைகளையும் கண்காணிக்கும் முதன்மை கூட்டுத் தலைமயகமான 'காதம் அல்-அன்பியா' அமைப்பின் முக்கிய அதிகாரியான இவர், இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சும்மா விடப்படாது என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் மிசான் செய்தி முகமையிடம் பேசிய அவர், இஸ்ரேல் செய்து வரும் இத்தகைய குற்றங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு எந்தவொரு சந்தேகமும் இன்றி உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.

Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam
கடலுக்குள் கட்டப்படும் மிகப்பெரிய சுரங்கப்பாதை., ஜேர்மனி டு டென்மார்க் 7 நிமிடத்தில் பயணம் News Lankasri