பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது.
காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் திகதி நிறுத்தபட்டது.
அமைதிப் பேச்சுவார்த்தை உடன்படிக்கை
இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணையக் கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணையக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று 6 இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது.
பாலஸ்தீனிய கைதிகள்
இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் வசமுள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது.
வரும் மார்ச் 1 ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரையும், தம்மதீபக் கோட்பாடும், தமிழர் பின்பற்றிய பௌத்தமும் 10 மணி நேரம் முன்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
