நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குக்காக குவியம் பெருந்தொகை மக்கள்
லெபனானின் அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகின்றன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் லெபனான் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஷியா அமைப்புகளும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகீர் கலிபாப்பும் இதில் பங்கேற்பார்கள் என நம்பப்படுகிறது.
இஸ்ரேலுடனான போர்
இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு அதன் அரசியல் வலிமையை நிரூபிக்கும் நிகழ்வாக காணப்படும்.
ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா, 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, அந்தக் குழுவை ஒரு இராணுவ அமைப்பாகவும், லெபனானில் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கியாதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |