ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி
காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேல் இராணுவ தாக்குதல்
இந்நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா நகருக்கு வடக்கே ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.
இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காசா நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
