பாலஸ்தீன மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இஸ்ரேலுக்கு ஐ.நாவிடம் இருந்து கடும் அழுத்தம்!
இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசாவின் பிரபல பாலஸ்தீன மருத்துவரை எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி 18 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைத்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
காசாவின் கமல் அத்வான் வைத்தியசாலையின் பணிப்பாளரான 52 வயதுடைய வைத்தியர் ஹுசாம் அபு சபியா என்பவரே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை ஆணைக்குழு
அவர் சிறைக்குள் கடுமையான சித்திரவதைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்கான ஐ.நாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வைத்தியர் அபு சபியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நாசர் ஒடே எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தபோது, சித்திரவதைகளால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவரை அடையாளம் காணக்கூட சிரமப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் நீதிமன்றத்தில் காணொளி மூலம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, உடல் எடை மிகவும் குறைந்து மெலிந்து காணப்பட்டார்.
வைத்தியர் அபு சபியா மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் நிபந்தனையின்றி பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவருக்கு உடனடியாக தகுந்த மருத்துவ சிகிச்சைகளை வழங்க இஸ்ரேல் முன்வர வேண்டும் எனவும் ஐ.நா கோரியுள்ளது.
சட்டவிரோத போராளி
கடந்த 2024 டிசம்பரில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் சேர்த்து வைத்தியர் அபு சபியாவை இஸ்ரேலிய படையினர் கைது செய்தனர்.
அவரை "சட்டவிரோத போராளி" என வகைப்படுத்தி, எவ்வித விசாரணையுமின்றி இஸ்ரேல் அடைத்து வைத்துள்ளது. எனினும், ஐ.நாவின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என இஸ்ரேல் சிறைச்சாலைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

காசாவின் சுகாதாரத்துறையை சீரழிப்பதற்காகவும், மருத்துவ நிபுணர்களை இலக்கு வைப்பதற்காகவும் இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே கடந்த 2025 செப்டெம்பரில் ஐ.நா குற்றம் சாட்டியிருந்தது.
காசாவில் இருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பாலஸ்தீன மருத்துவர்களில் அபு சபியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam