அதிர்ச்சியளிக்கும் இஸ்ரேலின் கடந்தகால செயல்கள்! அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
ஈரானின் தாக்குதல்களை முறியடிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது, எனவே ஈரானிய மண்ணில் இராணுவ தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்பதன் மூலம் இதை மேலும் அதிகரிக்க வேண்டாம்.இது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலின் கடந்தகால செயல்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு பிறகு போர் அமைச்சரவையில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸ், இஸ்ரேல் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார்.
பென்னி காண்ட்ஸின் வார்த்தைகள்
அதனடிப்படையில் "ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக உலகம். இது தான் விளைவு. இது ஒரு மூலோபாய சாதனையாகும், இதை நாம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக பயன்படுத்த வேண்டும்." என்று ஈரானுக்கு எதிராக காண்ட்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் நினைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த வார்த்தைகள் ஈரானிய இலக்கு மீதான தாக்குதலையோ அல்லது ஈரானுக்குள் முதல் வெளிப்படையான இஸ்ரேலிய தாக்குதலையோ நிராகரிக்கவில்லை.
இதேவேளை இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதுடன் சைபர் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளதுடன் இதில் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
போரின் தீவிரம்
இவ்வாறான இஸ்ரேலின் பல செயல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இராஜதந்திர வளாகத்தில் ஈரானின் மூத்த அதிகாரிகள் இருந்த கட்டடத்தை இஸ்ரேல் தாக்கியதை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் பகிரங்கமாக நம்பமுடியாத வாதத்தை முன்வைக்கிறது.
அதைவிட முக்கியமாக, இஸ்ரேலின் வான்வழி தாக்குதலை ஈரான் தனது சொந்த நிலத்தின் மீதான தாக்குதலாக விளக்கியது. மிக விரைவாக, ஈரான் பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாகியது. இருப்பினும் இது இஸ்ரேல் மீதான முழு அளவிலான தாக்குதல் அல்ல.
ஈரான் பல ஆண்டுகளாக ராக்கெட் மற்றும் ஏவுகணை படைகளை உருவாக்கி வருகிறது. இன்னும் பல ஆயுதங்களை இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.
லெபனான் போராளிகள் மற்றும் அரசியல் இயக்கம் ஈரானின் வலுவான நட்பு நாடாகும், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளின் ஆயுதங்கள் உள்ளன. தேவை ஏற்படின் லெபனானும் ஈரானுடன் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அறிவுரை
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, காசாவை இஸ்ரேல் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட பஞ்சம் தொடர்பாக பைடனுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையிலான பிளவு குறித்து சர்வதேச கவனம் செலுத்தப்பட்டது. இப்போது ஒற்றுமை குறித்து பேசுகிறார்கள்.
நெதன்யாகு தன்னை ஒரு உறுதியான மற்றும் நியாயமான தலைவராகவும், இஸ்ரேலில் உள்ள பல எதிரிகள் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற விரும்பினாலும், அவர் மக்களின் பாதுகாவலராக செயற்பட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 ஆம் திகதிக்கு முன்னர் அவரது மோசமான, பாதுகாப்பற்ற கொள்கைகள் இஸ்ரேல் பாதிக்கப்படக்கூடியது என்று ஹமாஸ் நம்புவதற்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.
G7 இல் உள்ள இராஜதந்திரிகளின் வேலை,இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பாரிய மோதல்களை தடுத்து சேதங்கள் ஏற்படாமல் அமைதியை நிலை நாட்டுவதாகும்.
இந்நிலையிலே இஸ்ரேலின் கடந்தகால தவறுகளை சுட்டிக்காட்டி திருப்பி அடிக்க வேண்டாம் என்ற ஜனாதிபதி பைடனின் ஆலோசனையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால், மத்திய கிழக்கில் அமைதி நிலவும்.
ஆனால் இந்த ஆபத்தான அத்தியாயத்தின் முடிவு என்பது எந்த வகையில் அமையும் என உறுதியாக தெரியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |