இஸ்ரேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை! எல்லை மீறும் போர் பதற்றம்
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் மக்கள் தூக்கத்தை இழந்து பதுங்குகுழியில் பதுங்கி வாழும் அவலம் ஏற்பட்டுள்ளதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான ஒரு பதற்ற சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி பின்னர் பல மட்டங்களில் காணப்பட்டது குறிப்பாக இராணுவ மட்டங்களில் காணப்பட்டது.
இதற்கு காரணமாக இருந்த சிரியாவில் அமைந்துள்ள ஈரானின் தூதரகம் மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உலகளாவிய ரீதியில் அதனை ஒருவரும் மறுதலிக்கவில்லை.
ஒரு தூதரகம் மீது தாக்குதல் செய்வது ஐ.நாவின் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது. ஏனென்றால் தூதரகம் ஒன்று மிக உட்சமான பாதுகாப்பை கொண்டது.தூதுவர் ஒருவரை கைது செய்ய கூட முடியாது.
ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!
இவ்வாறான ஒரு தாக்குதலின் பின்விளைவாக இன்று இஸ்ரேல் மக்கள் தூக்கத்தை இழந்து பதுங்குகுழியில் பதுங்கி வாழும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |