ஐந்து நாட்களாக தொடர்ந்த இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டை! இறுதியில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
இஸ்ரேல் இராணுவத்திற்கும் பாலஸ்தீன ஜிகாத் குழுவுக்கும் இடையே நடைபெற்ற சண்டை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்திற்கும் பாலஸ்தீன ஜிகாத் படையினருக்கும் இடையே 5 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வந்தது.
At least 33 Palestinians, and one Israeli, including civilians, have been killed in renewed hostilities in Gaza and Israel.
— Human Rights Watch (@hrw) May 14, 2023
The International Criminal Court should investigate serious crimes committed in or from Palestine. pic.twitter.com/i0TrVHHPIS
இந்நிலையில் எகிப்து அரசு இருதரப்புகளிடையிலும் சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று இரவு 10 மணி முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தரப்புகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி
ஆனால் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும், ராக்கெட் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி இரவு முழுவதும் கேட்டதாக இஸ்ரேல் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சண்டையில் 13 பொதுமக்கள் உட்பட 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பாலஸ்தீன ஜிகாத் படையினரின் ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
