இஸ்ரேலின் வான் வழி குண்டுவீச்சு! செயலிழக்கும் அபாய நிலையில் காசாவின் மருத்துவ கட்டமைப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் நிலை உக்கிரமடைந்து வரும் சூழலில் காசாவின் மருத்துவ கட்டமைப்பு செயலிழக்கும் அபாய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழி குண்டுத் தாக்குதல் முறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்
போர் தொடங்கி இன்று 7ஆவது நாளை அடைந்துள்ள நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு இடையே, மின்சாரம் இன்றி காசா மருத்துவமனைகள் தவித்து வருகின்றன. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு எகிப்து மற்றும் ஐ.நா. சபைக்கு ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹமாஸின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வான்வழி குண்டுவீச்சு நடத்தியதே சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தினமும் சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும் என்பதால், கடும் சவால்களை எதிர்கொள்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
