இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்: தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள்
புதிய இணைப்பு
வடக்கு இஸ்ரேலில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வலியுறுத்தி உள்ளார். கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக புடின் கவலை வெளியிட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்றாம் இணைப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வட காசாவில் உள்ள 10 இலட்சம் மக்கள் எங்கு செல்வதென தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் தொடரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 6ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து வரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவை முழுமையா இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
இவ்வாறான சூழலில், உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் இராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் 7ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர்.
இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி சுமார் 4 இலட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காஸா நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.
இந்தநிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |