கொழும்பில் தீவிரமாக பரவும் கண் நோய்: உடன் வைத்தியசாலையை நாடுங்கள்(Video)
கொழும்பில் தற்போது தீவிரமாக பரவி வரும் கண் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், ஐந்து நாட்களுக்கு மேல் அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியமானது எனவும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இந்த கண் நோய் தொடர்பில் சுகாதாரத் துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது என கொழும்பு சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அச்சம் கொள்ள வேண்டியதில்லை..
மேலும், கொழும்பு மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகளிலும் மற்றும் பொரளை ஆகிய பகுதிகளிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் தீவிரமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த கண் நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி மேலும் அறிவுறுத்தினார்.
இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கண்கள் சிவத்தல், தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களிடத்தில், 5 நாட்களுக்கு மேலாக இவ்வாறான அறிகுறிகள் நீடிக்குமாயின், உடனடியாக அவர்களை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்நோய் தொற்றை குறைப்பதற்காக அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், கண்களைத் தொடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி மேலும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You May Like This Video
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri