இலங்கையில் வேகமாக பரவும் நோய் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியினால் சிறுவர்கள் மத்தியில் கண்நோய் வேகமாகப் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் அவ்வப்போது வைரஸ்கள் மற்றும் கண் நோய்கள் வரலாம் எனவும் எனவே அழுக்கு கைகளால் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்
கண் சிவத்தல், கண்ணீர் வெளியேற்றம், கண் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இந்த கண் நோய் வைரஸ் என்பதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையில்லை எனவும், ஐந்து நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால், சிகிச்சை பெறுமாறும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.