இஸ்ரேல் யுத்தம் தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு
உண்மையில் நாங்கள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் பக்கம் இருந்தோம். இன்றும் இருக்கின்றோம், நாளையும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கிடையில் இடம்பெற்று வரும் போர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
தேர்தலை ஒத்திவைப்பது தவறு
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில்,
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அது தொடர்பில் எனக்கு தற்போது வரை எதுவும் தெரியாது. அப்படி ஒத்திவைப்பது தவறு.
சரியான நேரத்தில் தேர்தலலை நடத்த வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக மக்கள் எங்களுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். பொதுஜன பெரமுனவுக்கு நிச்சம் வேறு ஒரு தலைவர் எதிர்காலத்தில் வருவார். எப்போதும் வயதானவர்கள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.