பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்(Photos)
பாலஸ்தீனத்திலும், காசா பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்தும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தியும் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (03.11.2023) மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஏறாவூர் நகரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்த கண்டன எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களை வெட்டுவேன் என்ற அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால்! முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வரவும்
ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை
பேரணியின் இறுதியில் பாலஸ்தீனப் பொதுமக்கள் சிறுவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோர் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களும் போர்க் குற்றங்களும் கண்டிக்கப்பட வேண்டும் என கோரி கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன.
அத்தோடு பாலஸ்தீன நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்து இஸ்ரேலை வெளியேற்ற ஐக்கிய நாடுகள் சபையை கோருவதற்காக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா போராட்டம்
மேலும், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
கிண்ணியா பொதுமக்கள் இணைந்து இன்று (03.11.2023) முன்னெடுத்திருந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந் நிகழ்வில் பாலஸ்தீன மக்கள் படுகின்ற இன்னல்கள் குறித்து விளக்கமளிக்கப் பட்டதோடு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டு கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன.








பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
