காசாவில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
காசாவில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (16) முதல் காசா முழுவதும், தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலுக்கு அமைய, இஸ்ரேல், காசாவில் இனப்படுகொலை செய்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்த நிலையிலேயே, இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்கள் ஆரம்பம்
இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது, 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் உள்ள சிறுவர் மருத்துவமனை உட்பட மூன்று மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் 150 க்கும் மேற்பட்ட "பயங்கரவாத இலக்குகளை" தாக்கியதாக அறிவித்துள்ளது.
குழுவின் "கடைசி கோட்டை" என்று அது விபரிக்கும் இடத்தில் 3,000 ஹமாஸ் போராளிகளை தோற்கடித்து, தமது பணயக்கைதிகளை விடுவிப்பதே, இந்த தாக்குதலின் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
சர்வதேச கண்டனம்
ஆனால் இந்தத் தாக்குதல் பரவலான சர்வதேச கண்டனத்தைப் பெற்றுள்ளது. 20 க்கும் மேற்பட்ட உதவி நிறுவனங்கள், உலகத் தலைவர்களை நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.
காசாவில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழ்நிலை மனசாட்சிக்கு விரோதமானது என்று கூறி அவசர தலையீட்டுக்கு அவை அழைப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, இஸ்ரேலின் தாக்குதல்களால், பாலஸ்தீன ஏதிலிகள், அல்-மவாசியில் உள்ள இஸ்ரேலால் அறிவிக்கப்பட்டுள்ள "மனிதாபிமானப் பகுதிக்கு" ஒரு கடற்கரைப் பாதையில் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
