மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளி : லெபனான் - இஸ்ரேல் இடையே முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தை
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு லெபனானும் இஸ்ரேலும் தங்களின் முதல் தூதரகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இந்த அரிதான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மத்தியஸ்தம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இது ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு" என்று கூறியுள்ளார்.
ஆரம்பகட்ட அமர்வு மட்டுமே என்றும்
தற்போது நிலவி வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.

இதன்போது, உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை லெபனான் வலியுறுத்தியுள்ளது.
எல்லையில் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் இல்லாத நிலையை உருவாக்குவது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தியுள்ளது.
இது ஒரு ஆரம்பகட்ட அமர்வு மட்டுமே என்றும், அனைத்து சிக்கல்களையும் ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது என்றும் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய பதற்றமான சூழலில் இந்த நேரடி உரையாடல் ஒரு முக்கியமான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri